ஜெயலலிதா சிலையில் தேவைப்பட்டால் மாற்றி அமைக்க நடவடிக்கை முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி
ஜெயலலிதா சிலையில் தேவைப்பட்டால் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறினார்.
நெல்லை,

முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.10 கோடி நிதி வழங்கி உள்ளார். ரூ.100 கோடியில் உலக தமிழ் சங்க பணிகள் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழ் வளர்ச்சி துறை முதன்மையாக இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஐ.ஐ.டி. நிறுவனத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டிக்கத்தக்கது. அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் நிறுவனங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். அதை செய்ய தவறியது கண்டனத்துக்கு உரியது.
ஜெயலலிதா சிலையில் மாற்றம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிலை, ஜெயலலிதா சிலை போன்று இல்லை என்று சிலர் விமர்சித்து உள்ளனர். சிலையின் தோற்றம் திருப்தி அளிக்காவிட்டால் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அமைச்சர்கள் குறித்து டி.டி.வி. தினகரன் விமர்சித்து உள்ளார். தமிழக அரசியல் களத்தில் அவரை மக்கள் மறக்க தொடங்கி விட்டனர். எனவே தனது இருப்பை வெளிக்காட்டும் வகையில் இது போன்று ஏதாவது கூறிவருவார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகைசெல்வன் கூறினார்.