காரிமங்கலத்தில் ஆட்களை ஏற்றி சென்ற 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
‘தினத்தந்தி’ நகர்வலம் செய்தி எதிரொலியாக காரிமங்கலம் பகுதியில் ஆட்களை ஏற்றி சென்ற 2 சரக்கு வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று ‘தினத்தந்தி’ நகர்வலம் பகுதியில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புச்செழியன் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அவற்றில் விதிமுறைகளை மீறி ஆட்களை அதில் ஏற்றி வந்திருப்பது தெரிந்தது.
உடனடியாக அந்த 2 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருபவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக வட்டார போக்குவரத்து துறையினர் எடுத்த உடனடி நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.