விழுப்புரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
விழுப்புரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அதனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லக்கூடிய சாலை பல ஆண்டுகளாக மிகவும் குண்டும்- குழியுமாக சேதமடைந்து இருந்தது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை அதனூர் கிராம மக்கள், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதுமட்டுமின்றி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதன் விளைவாக இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்த நெடுஞ்சாலைத்துறை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜல்லிக்கற்களை கொட்டினார்கள்.
ஆனால் சாலையை சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதால் அதில் கிராம மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த அதனூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்செல்வராஜ், கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்மணி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்ககளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் லோகநாதனும் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனடியாக சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. கிராம மக்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சாலை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது.