சுத்தமல்லி அருகே பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது 2 பேர் கோர்ட்டில் சரண்

சுத்தமல்லி அருகே நடந்த பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2018-02-27 20:30 GMT
பேட்டை,

சுத்தமல்லி அருகே நடந்த பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

பெண் கொலை


நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 32) லாரி டிரைவர். அவருடைய மனைவி பேச்சியம்மாள் (28). கணவன்– மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பேச்சியம்மாள் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன், சுத்தமல்லி அருகே உள்ள வடக்கு சங்கன்திரடில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 23–ந் தேதி இரவில் பேச்சிமுத்து தனது நண்பர்களுடன் பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் சேலையால் பேச்சியம்மாள் கழுத்தை இறுக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

மேலும் ஒருவர் கைது


இதுதொடர்பாக பேச்சிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் தென்காசியை அடுத்த கீழப்புலியூரை சேர்ந்த குமார் (24), ஸ்ரீபத்மநாபநல்லூரை சேர்ந்த கருத்தபாண்டி (22), அதே ஊரை சேர்ந்த முத்தையா (23) உள்பட 5 பேர் மீது சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பேச்சிமுத்து கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். கருத்தபாண்டி, முத்தையா ஆகிய 2 பேரும் நெல்லை 4–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்