ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு அலுவலர் கைது
நாட்டறம்பள்ளியில் திருமண நிதியுதவிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளி,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரின் மகன் கவியரசன் (வயது 25), போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நாட்டறம்பள்ளியை அடுத்த பி.பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் குபேந்திரன் மகள் கனிமொழி (24). கடந்த 19-ந் தேதி கவியரசனுக்கும், கனிமொழிக்கும் செங்கத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு நாட்டறம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதியுதவி கோரி கனிமொழி விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக கனிமொழி தனது அக்கா ராதிகாவிடம் (30), ஒன்றிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு திருமண நிதியுதவி பற்றி விசாரிக்கும்படி கூறியிருந்தார்.
அதன்படி ராதிகா ஒன்றிய அலுவலகத்தில் சென்று தனது தங்கையின் திருமண நிதியுதவி பற்றி விசாரிக்க தொடங்கினார்.
அப்போது அங்கு சமூக பாதுகாப்பு அலுவலராக பணிபுரியும் ரபியா (57) என்பவர் ராதிகாவிடம், உனது தங்கைக்கு திருமண நிதியுதவி கிடைக்க வேண்டும் என்றால் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கூறினார்.
ஆனால் ராதிகா லஞ்சம் தர விரும்பவில்லை. உடனடியாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ராதிகா புகார் தெரிவித்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி வந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த சில நாட்களாக ரபியாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் அறிவுரையின்பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகள் ரூ.2 ஆயிரத்தை ராதிகா வாங்கி கொண்டு ரபியாவை சந்திக்க சென்றார்.
ராதிகா ரபியாவிடம், ரூ.2 ஆயிரத்தை கொடுத்தபோது வெளியே நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரபியாவை சுற்றி வளைத்தனர். பின்னர் ரபியாவின் கையில் இருந்த ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.