மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், கலால் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பாக மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி வரவேற்றார்.
ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக மறுபடியும் தாலுகா அலுவலகத்துக்கு வந்து நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் அரசு கலைக்கல்லூரி, ஐ.டி.ஐ. உள்பட 10 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் தங்கள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக குடிப்பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், அவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும், மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. மாவட்டந்தோறும் மதுபானங்கள் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முகாம்கள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் மதுபானங்கள் மற்றும் சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, கிராமங்கள் தோறும் தெருமுனை பிரசாரம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊடகங்கள் மூலம் விளம்பரம், துண்டு பிரசுரம், காகிதம் மற்றும் துணியினால் செய்யப்பட்ட விளம்பர கொடிகள் போன்றவை மூலமாகவும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான சமூக, பொருளாதார, புவியியல் காரணிகளுக்கு ஏற்றவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், தாசில்தார் ரவி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் இந்திரராஜன், மாவட்ட ஓட்டல் சங்கத் தலைவர் மண்ணுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.