மராட்டிய பட்ஜெட்டில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அறிகுறி தென்படும் எதிர்க்கட்சிகள் கருத்து
மராட்டிய பட்ஜெட் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.;
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்துவதில் ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து பேசிவரும் மத்திய அரசு ஒரே நேரத்தில் பாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடத்தும்போது தேவையில்லாத கால விரயமும், பண செலவும் குறையும் என்று கூறி வருகிறது. இதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது சாத்தியமற்றது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மராட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறுகையில், “ இந்த பட்ஜெட் அவர்கள்(பா.ஜனதா) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தலை ஒன்றாக நடத்த திட்டமிட்டுள்ளனரா அல்லது தனித்தனியாக நடத்த திட்டமிட்டுள்ளனரா என்பது தெரிந்துவிடும். எனவே நாங்கள் பட்ஜெட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து கூர்மையாக கவனித்து வருகிறோம் ” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘பா.ஜனதா இந்த பட்ஜெட் மூலம், சட்டசபை தேர்தலை, பாராளுமன்ற தேர்தலுடன் ஒரே நரத்தில் நடத்தி அதன்மூலம் அதிகபட்ச பயனை அடைய விரும்புகிறது. பாராளுமன்ற தேர்தலில் மத்திய பா.ஜனதாவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை மாநில தேர்தலிலும் பிரதிபலிக்க செய்ய அக்கட்சி திட்டமிடுகிறது.
நேரமும், பணமும் விரயமாவதாக பா.ஜனதா அரசு குறிப்பிட்டாலும் உண்மையில் இது ஒரு அரசியல் ரீதியான முடிவுதான் ’ என்றார்