மளிகை கடைக்காரரிடம் ரூ.2½ லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் மளிகை கடைக்காரரிடமிருந்து ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகானந்தம் (வயது 43). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக வேண்டி, நேற்று காலை பணம் எடுப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டத்தில் உள்ள வங்கிக்கு வந்தார். பின்னர் அங்குள்ள வங்கியில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவிலுள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வெளியே வந்தார். பின்னர் வங்கியில் எடுத்த பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார்.
ரூ.2½ லட்சம் பறிப்பு
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சண்முகானந்தம் கையில் வைத்திருந்து பணப்பையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை அப்பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதாகைகளை அகற்ற கோரிக்கை
திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஜெயங்கொண்டம் கடைவீதி, நான்கு ரோடு உள்பட முக்கிய இடங் களில் காவல் துறை மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேமரா பொருத்தப்பட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராவை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மளிகை கடைக்காரரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் சோதனை செய்தனர். இதில் பல இடங்களில் கேமராவை விளம்பர பதாகைகள் மறைத்து இருந்ததால் கொள்ளையர்கள் முகத்தை சரிவர கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். எனவே ஜெயங்கொண்டம் பகுதியில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.