கிரஷர் ஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
க.பரமத்தி அருகே கோடந்தூர் பகுதியில் கிரஷர் ஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பொறுப்பும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் க.பரமத்தி அருகே கோடந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:–
கோடந்தூர் ஊராட்சி பகுதியில் ஏற்கனவே 6 இடங்களில் கல் குவாரியுடன் ஜல்லி கிரஷர் ஆலை அமைந்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 இடங்களில் புதிதாக கிரஷர் ஆலை அமைக்க தனியார் நிறுவனத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த ஆலை அமைந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவதோடு, விவசாய விளை நிலங்களும் பாதிக்கப்படும்.
இந்து மக்கள் கட்சியினர்...
தங்கள் பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள 6 ஆலைகளால் பாதிப்படைந்து வருகிறோம். கல் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளின் சத்தங்களால் அதிர்ச்சி ஏற்படுகிறது. எனவே மேலும் புதியதாக கிரஷர் ஆலை அமைக்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமையில் மாவட்ட தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். இதில் கையில் 2 பேர் வாழை குலையுடனும், அர்ஜூன் சம்பத் உள்பட 2 பேர் மண் வெட்டியுடனும், விவசாயிகள் போல தலையில் தலப்பாகை கட்டிக்கொண்டு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி மண்வெட்டிகள், வாழை குலைகளை வைத்துவிட்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் மனு கொடுக்க உள்ளே செல்லுமாறு கூறினர்.
காவிரி மேலாண்மை வாரியம்
இதையடுத்து அர்ஜூன்சம்பத் மற்றும் சில நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் ஓடும் நதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். குளங்கள், ஏரிகளை தூர்வார வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூறப்பட்டிருந்தது. கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி அதிகாரிகளிடம் கூறினர்.
மாணவ– மாணவிகள்
கிருஷ்ணராயபுரம் அருகே ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுகொடுப்பதற்காக பள்ளி மாணவ– மாணவிகளை சீருடையில் அழைத்து வந்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளை மனு கொடுக்க அழைத்து வரக்கூடாது என போலீசார் எச்சரித்து, பொதுமக்களை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘ஆண்டிபாளையம் காலனி தெருவில் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் முள்வேலியிட்டு அடைத்து வைத்திருப்பதாகவும், இதனால் மாணவ– மாணவிகள் நீண்டதூரம் சுற்றி சென்று பள்ளிக்கு சென்று வருவதாகவும், அந்த முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குளம் தூர்வாருதல்
வெள்ளியணை தென்பாகம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் உறுப்பினர் ஞானசேகர் கொடுத்த மனுவில், கரூர் மண்டலத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவித்திருந்தார். அரவக்குறிச்சி நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், புதிய குடும்ப அட்டையில் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளது என்பதற்கு பதிலா 2 சிலிண்டர் உள்ளது என தவறுதலாக பதிவிட்டதால் ரேஷன் கடையில் மண்எண்ணெய் வழங்கப்படாமல் நிறுத்தி விட்டதாகவும், தவறான பதிவை நீக்க கோரி கூறியிருந்தனர்.
நலத்திட்ட உதவிகள்
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் உத்தரவிட்டார். கூட்டத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களையும், சலவை பெட்டிகளையும் சூர்யபிரகாஷ் வழங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.