புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் அரசு துறைகளுடன் இணைந்து சட்டசேவை முகாம்
புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் அரசு துறைகளுடன் இணைந்து சட்டசேவை முகாம் உறுப்பினர் செயலர் சோபனா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலர் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய் உத்தரவு படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல்தலைவர் ஹீலுவாடி ரமேஷ் வழிகாட்டுதலின்படியும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் 2-வது சட்ட சேவைகள் சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதுவை தவளக்குப்பத்தில் சுபமங்கள திருமண மகாலில் நடக்கிறது.
மேலும் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ‘பான்கேர்’ நிறுவனத்துடன் இணைந்து புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் புதுவை அரசு சட்டத்துறை செயலர் செந்தில், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், புதுவை மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி, புதுவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், புதுவை தலைமை நீதிபதியுமான தனபால் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.