மோட்டார் சைக்கிள் மோதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பலி

திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பலியானார்.

Update: 2018-02-26 22:15 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சின்னையன்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது50). இவர் திருக்கண்ணபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (24). நேற்று முன்தினம் இரவு சேகர் சீயாத்தமங்கையில் இருந்து திருமருகலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரவாடி என்ற இடம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் இளையராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சேகர் மீது மோதியது.

இதில் சேகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த இளையராஜாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சேகருக்கு அமுதா (50) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 

மேலும் செய்திகள்