ராஜபாளையத்தில் பெண் வெட்டிக் கொலை
ராஜபாளையத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை குடிபோதையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பெரிய கடை பஜார் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்தாஸ் (வயது 37). இவருக்கும், சுந்தரநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த கோகுல லட்சுமி (33) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நவீன்தாஸ் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். தற்போது பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கும், மனைவி கோகுல லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கோகுல லட்சுமி சுந்தரநாச்சியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்ததோடு தளவாய்புரம் அருகே கொம்மந்தபுரத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று நவீன்தாஸ், கோகுல லட்சுமி வேலை பார்க்கும் கடைக்கு குடிபோதையில் சென்று அவரோடு தகராறு செய்ததுடன், அவரை கடைக்கு வெளியே இழுத்துச் சென்று கை, கால், இடுப்புப் பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
தகவலறிந்த தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டுப்பட்டு கிடந்த கோகுல லட்சுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆயினும் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல லட்சுமி இறந்தார். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்தாசை கைது செய்தனர்.