வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த வாலிபர் கைது

ராஜபாளையத்தில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-02-26 22:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 56). கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் வீட்டு மாடியில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

அவர் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 ½ பவுன் தங்கநகையை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் நகையை பறிக்க முடியாத காரணத்தால் அவரை அடித்து உதைத்து நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் வந்து அந்த நபரை பல இடங்களில் தேடினர்.

பின்னர் புதிய பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்தவரை பொது மக்கள் பிடித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் விசாரித்த போது நகையை பறித்தவர் தூத்துக்குடி சண்முகாபுரம் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்என்பவரது மகன் ஜெகன் (25) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்