மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு, கொத்தனார் கைது
திருப்புவனம் அருகே உள்ளது மேலராங்கியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ளது மேலராங்கியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது39). கொத்தனாரான இவர் குடும்பத்துடன் திருப்பாச்சேத்தி அருகே வைகை மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மலைச்சாமிக்கும் அவருடைய மனைவி ஜோதிலெட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி அவருடைய மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதை தடுக்க சென்ற மாமியார் வீராயியையும் அவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜோதிலெட்சுமி மற்றும் வீராயி ஆகிய 2 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஅமீன் வழக்கு பதிவு செய்து மலைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.