‘சீல்’ வைக்கப்பட்ட 2 திருமண மண்டபங்களையும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும்
‘சீல்’ வைக்கப்பட்ட 2 திருமண மண்டபங்களையும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று புதுப்பாளையம், ராயம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
அவினாசி அருகே புதுப்பாளையம் மற்றும் ராயம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 1.70 ஏக்கரில் உள்ள சொத்தை திருக்கோவிலுக்கு நந்தவனம் அமைத்து பூக்கள் சுவாமிக்கு கொடுக்கும் நல்ல எண்ணத்தில் தானமாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் வந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து சொத்தின் உரிமை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் சொத்துக்கள் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் கடந்த ஒருஆண்டுக்கு முன்பு சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக திருப்பூர் ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் அந்த இடத்தில் இருந்த 2 திருமண மண்டபங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதன்காரணமாக கோவிலுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி அழிந்து சிதைந்து வருகிறது.
எனவே கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியும், கோவிலுக்கு ஏற்படும் வருமான இழப்பை காக்கும் வகையிலும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 திருமண மண்டபங்களையும் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும்.
பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் பில்லூர் குடிநீர் திட்ட நீர் நேரடியாக ஏற்றமுடியவில்லை. இதனால் அருகில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் விடப்பட்டு அதன்பிறகு நீர் ஏற்றப்படுகிறது. சிறிய நீர்த்தேக்க தொட்டியாக இருப்பதால் பலமுறை நிரப்பி தண்ணீர் ஏற்ற வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பில்லூர் குடிநீருக்கு தனியாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி தண்ணீர் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவி சுசீலா தேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், திருப்பூரின் பல பகுதிகளில் குடியிருக்கும் ஏழைப்பெண்கள் குடும்பத்துடன் மிகவும் சிரமத்துடன் குடியிருந்து வருகிறார்கள். 84 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்து மக்கள் கட்சியினர் அளித்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பெருமாநல்லூர் ஊராட்சி வலசுபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 70 குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். ஒரே ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அந்த குழாயிலும் குடிநீர் குறைவாகவே வருகிறது. இதன்காரணமாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். எங்கள் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் திறப்பாளரையும் மாற்ற வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வீரபாண்டி குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் 3 தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, தண்ணீர் வரி மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. நாங்கள் வசிக்கும் இடம் நத்தம் காமாட்சியம்மன் கோவில் என்று கிராம கணக்கு புத்தகத்தில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.