கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கல்லூரி விரிவுரையாளர் ஒருவரை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகம், போலீசார் இணைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தை தூண்டியதாக கூறி மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கல்லூரியில் பெற்றோர், மாணவர்கள் கொண்ட கமிட்டியை உருவாக்க வேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள் குழுவை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமைகளுக்காக போராடிய மாணவர்கள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வரும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் அறிவித்தனர். இதற்காக பந்தல் அமைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட முயன்றனர். இதற்கு கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மாணவர்களுக்கும், விரிவுரையாளர் களுக்கும் இடையே சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சமயத்தில் கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து செல்போனில் படம் எடுத்த நபரை விரிவுரையாளர்கள் பிடித்து வைத்தனர். இதனால் பதற்றம் நிலவியது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. பின்னர் விரிவுரையாளர்கள் கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.