காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள், காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கலபுரகியில் நேற்று நடைபெற்றது. அதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:-
காங்கிரசில் குடும்ப அரசியல், மோசடி அரசியல் நடக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடி கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். இந்த வழக்கில் மத்திய அரசு கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை உரிய விசாரணை நடத்தி வருகிறது.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் லிங்காயத்துக்கு தனி மதம் கோரும் கர்நாடக அரசின் முடிவை ரத்து செய்வோம். வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். சித்தராமையா அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது. எங்கள் ஆட்சி அமைந்ததும் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம்.
ஐதராபாத்-கர்நாடக பகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கு ஒரு பொருளாதார விரைவுச்சாலை அமைத்தால், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதை சித்தராமையா செய்ய மாட்டார். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.
இந்த ஆட்சியில் திப்பு சுல்தான் ஜெயந்தி மட்டுமே கொண்டாடப்பட்டது. தற்போது பாகுமணி சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவது பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது?. திப்பு சுல்தான் மற்றும் பாகுமணி ஆட்சியில் இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. அத்தகையவர்களின் ஜெயந்தியை கொண்டாடுவதில் இந்த காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டுகிறது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள்தொகை அதிகமாக உள்ளது. நீங்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாற்றத்தை கொண்டு வரும் பொறுப்பு யார் மீது உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் இந்த காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
அதிகளவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி செய்து வருகிறார். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் 5 ஆண்டுகளில் இந்த மாநிலத்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைய செய்வோம். அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அரசியல் சாசன அதிகாரம் வழங்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. ஆனால் அதை காங்கிரஸ் தடுத்துவிட்டது. டெல்லி மேல்-சபையில் அந்த மசோதாவை நிறைவேற்ற விடவில்லை. இதன் மூலம் அந்த கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோரின் நலன் பற்றி சித்தராமையா பேசுகிறார். ஆனால் சிறுபான்மையினருக்கு மட்டுமே திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறார். பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அந்த திட்டங்களின் பயனை அம்மக்களுக்கு போய் சேர விடாமல் சித்தராமையா அரசு தடுக்கிறது. அதனால் கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மட்டுமே இந்த பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.