நோய், கடன் தொல்லையால் அவதி: மனைவியை கொலை செய்து அரசு ஊழியர் தற்கொலை
நோய், கடன் தொல்லை காரணமாக மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அம்மன் நகரை சேர்ந்த தாவீது மகன் கார்த்திக் (வயது 33). இவர், வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதியில் காப்பாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி மீரா (26). இந்த தம்பதிக்கு நிலா (8) என்ற மகளும், வருண் என்ற 1½ வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளனர்.
தனது பெற்றோருடன், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக கார்த்திக் வசித்து வந்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை கார்த்திக்கின் பெற்றோர் தேவாலயத்துக்கு சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக தாவீது உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது, ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் கார்த்திக் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மீரா, தரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தாவீது கதறி அழுதார். அவருடைய அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த அறையில், மீரா அணிந்திருந்த வளையல்கள் உடைந்து கிடந்தன. மேலும் அவர் அணிந்திருந்த கம்மல் ஒன்றும் கீழே கிடந்தது. இதனால், அவரை கார்த்திக் கொலை செய்வதற்கு முன்பு போராடி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சம்பவ நடந்த அறை முழுவதும் போலீசார் சோதனை நடத்திய போது, கார்த்திக் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், எனக்கு அன்பானவர்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், கிட்னி செயல் இழப்பு காரணமாகவும், கடன் தொல்லை இருப்பதால் அதற்கு வைத்தியம் பார்க்க என்னிடம் பணம் இல்லாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். கூடவே, என் மனைவி, பிள்ளைகளையும் அழைத்து செல்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தின் அடிப்படையில் பார்த்தால் கார்த்திக் தனது மனைவி, குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் மனைவியை கொலை செய்த கார்த்திக், தனது குழந்தைகளை கொல்ல மனமின்றி அவர்களை உயிரோடு விட்டது விசாரணையில் தெரியவந்தது.
தாயும், தந்தையும் இறந்த நிலையில், குழந்தை வருண் பசியால், பாலுக்காக அம்மா... அம்மா... என்று கதறி அழுதது அங்கு கூடியிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது.