காங். அரசு மீது கூறும் குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா?
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா சவால் விடுத்து உள்ளார்.
பெங்களூரு,
3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார்.
பெலகாவி மாவட்டம் அதானியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
“காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளாரா?. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும், 10 சதவீதம் கமிஷன் பெறுவதாகவும் பிரதமர் மோடி பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க பிரதமர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் சி.பி.ஐ, மத்திய உளவுத்துறை இன்னும் பல துறைகள் உள்ளன. அந்த துறைகள் மூலம் கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதா? என்பதை பிரதமர் கண்டுபிடிக்கட்டும். அதற்கான ஆதாரங்களை வெளியிடட்டும். அதற்கு முன் காங்கிரஸ் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூறுவதற்கு பிரதமருக்கு தகுதி இல்லை.
ஊழல் புகாரில் எடியூரப்பா சிறைக்கு சென்று வந்தார். அவரை அருகில் வைத்து கொண்டு காங்கிரஸ் அரசு மீது பிரதமர் கூறும் ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஊழலுக்கு எதிராக பேசி வரும் பிரதமர் மோடி, ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை முதல்-மந்திரியாக்க துடிப்பது ஏன்? அவரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக மக்களிடம் ஓட்டு கேட்டு பிரதமர் வரவேண்டிய அவசியம் என்ன? இதுபற்றி பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்வது பற்றி பிரதமருக்கு தெரியாதா? பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்? பா.ஜனதாவினர் உண்மை பேசுவதே கிடையாது. அவர்களது வாயில் இருந்து பொய் மட்டுமே வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தான் மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சரவணபெலகோலாவில் நடைபெற்று வரும் மகா மஸ்தகாபிஷேகத்திற்காக கர்நாடக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மகா மஸ்தகாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்கும்படி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் 100 முறை கர்நாடகத்திற்கு வந்து பேசினாலும், கர்நாடக மக்களின் மனதை மாற்ற முடியாது. அவர்களது பேச்சை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. பெலகாவி மாவட்டத்தில் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.”
இவ்வாறு சித்தராமையா பேசினார்.