மாசிமக தீர்த்தவாரி விழா ஆலோசனை கூட்டம்
மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற உள்ள மாசிமக தீர்த்தவாரி விழா குறித்த முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்,
108 வைணவ தலங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் மாசிமக தெப்ப திருவிழா வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது. 2-ந் தேதி மாமல்லபுரம் கடற்கரையில் கோவிலுக்கான மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெறுகிறது. 2 நாள் விழாவில் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் எஸ்.சங்கர் தலைமையில் கோவில் வளாகத்தில் நடந்தது. தெப்ப திருவிழா கமிட்டி தலைவர் எஸ்.ஜனார்த்தனம் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் சாந்தி வரவேற்றார்.
இதில் அறநிலையத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பேரூராட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் முக்கியமாக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது, காவல் துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்புக்காக போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, பக்தர்களின் வசதிக்காக தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைத்தல், பக்தர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வசதி செய்து கொடுத்தல், தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்காக தீயணைப்பு வாகனம் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட தற்காலிக வசதிகள் செய்து கொடுப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, வருவாய் அலுவலர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி, தெப்ப திருவிழா கமிட்டி செயலாளர் வி.இ.உமாபதி, நிர்வாகக்குழு உறுப்பினர் ஓம்பிரகாஷ்ரத்தோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.