பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகை-பணம் திருட்டு
பூந்தமல்லி அருகே கடையின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து 23 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் கோபால்(வயது 50). இவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. தரை தளத்தில் 2 கடைகள், ஒரு வீடும், முதல் மற்றும் 2-வது தளத்தில் தலா ஒரு வீடு உள்ளன.
தரை தளத்தில் உள்ள 2 கடைகளில் அவரே டீ மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடை வழியாக கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்குள் சென்று விடலாம்.
நேற்று முன்தினம் இரவு கோபால், வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மாடியில் உள்ள வீட்டில் சென்று படுத்து தூங்கி விட்டார்.
நேற்று காலையில் கடையை திறக்க மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, 2 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், முதலில் டீ கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால், அருகில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கடை வழியாக வீட்டுக்குள் புகுந்து அங்கு பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டது தெரிந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள சுல்தான் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ரூ.15 ஆயிரத்தையும் திருடிச்சென்று விட்டனர்.
2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.