மணல் குவாரிகளாக மாறிவரும் விளைநிலங்கள்
பேரணாம்பட்டு பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் மணல் குவாரிகளாக மாறி அனுமதியின்றி செயல்படும் நிலையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர்.
பேரணாம்பட்டு,
தமிழக எல்லையில் அமைந்துள்ள பேரணாம்பட்டு பகுதியில் மசிகம், மதினாபல்லி, சேராங்கல், கொத்தபல்லி, ஓங்குப்பம், சின்னதாமல் செருவு, பத்தலபல்லி, சாத்கர், ரங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த வழியாக ஓடும் ஆற்றின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் பயனடைந்து வந்தனர். இந்த ஆற்றில் மணல் வளம் அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மணல் படிவுகள் அதிகரிக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாகத்தான் இந்த பகுதியில் பருவமழை போதிய அளவில் இருந்தது. அதற்கு முன்பு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து விளைச்சல் இல்லாமல் இழப்பைத் தான் பெற முடிந்தது. இதனையடுத்து இவர்கள் தங்கள் விளைநிலங்களை குத்தகைக்கு விட்டனர்.
இவ்வாறு குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை எடுத்தவர்களும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் மணல் வளம் இருப்பதால் அவை மணல் குவாரிகளாக மாறி வருகின்றன.
பேரணாம்பட்டில் இருந்து கொத்தபல்லி செல்லும் தரைப்பாலத்தின் அருகில் அமைந்துள்ள 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 3 மணல் குவாரிகளும், ஓங்குப்பம் கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலத்தில் 4 மணல் குவாரிகளும், அதன் அருகில் 15 ஏக்கர் கரும்பு தோட்டத்திற்கு மத்தியில் 2 மணல் குவாரிகளும் இயங்கி வருகின்றன. இவை அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மணல் குவாரிகளில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் பல அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டு ராட்சத ஜல்லடை மூலம் மணல் எடுத்து அவை கடத்தப்பட்டு வருகிறது. மாட்டு வண்டியில் கடத்தப்படும் மணலானது ரூ.1, 200-க்கும், டிராக்டரில் கடத்தப்படும் மணல் ரூ.6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது.
அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இந்த இடங்களின் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மணல் எடுக்கப்பட்ட இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த இடமும் பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதால் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிக்க செல்லும் சிறுவர்கள் இறந்து போகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
ஆனால் அனுமதியின்றி செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமலும் உள்ளனர்.
எனவே அனுமதியின்றி செயல்படும் மணல்குவாரிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.