ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கத்தினர் தஞ்சையில் உண்ணாவிரதம்
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில இணை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்கக்கல்வி அதிகாரி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது குறித்து மாநில முழுமைக்குமான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் மாநில தலைவர் சந்திரசேகரன், மாநில செயலாளர் ராம்குமார், பொருளாளர் கார்த்திகேயன், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் செல்வன், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், பொறியாளர் அணி மாநில தலைவர் எழில்புத்தன், ஆதிதமிழர் பேரவை மாநில துணைத்தலைவர் குயிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.