விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தஞ்சை அருகே விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆரோக்கிய நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இளமாறன் (வயது 21). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.
பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் இளமாறன் ஜமால் உசேன் நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளின் சாவியை அவரிடம் கொடுத்து, மோட்டார் சைக்கிளை வீட்டில் ஒப்படைத்து விடு. நான் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி விட்டு சென்றார். அதன் பின்ன அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ஜமால் உசேன் நகர் பகுதியில் காலியாக உள்ள ஒரு மனையில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி அருகே இளமாறன் பிணமாக கிடந்தார். இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இளமாறன் பிணமாக கிடந்த இடத்தின் அருகே காலி விஷப்பாட்டிலும் கிடந்தது. எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இளமாறன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.