ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.- தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.- தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2018-02-24 23:00 GMT
கோட்டைப்பட்டினம்,

தமிழகம் முழுவதும் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அங்கு அ.தி.மு.க. கொடியேற்றுவதற்காக அ.தி.மு.க.வினர்- தினகரன் ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில் வந்தனர். இதனால் யார் முதலில் கொடியேற்றுவது என்று இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தினகரன் ஆதரவாளர் அலிஅக்பர், அ.தி.மு.க. செயலாளர் ஹாஜா பகுருதீன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு தரப்பினர் மட்டும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்