கோஷ்டி மோதல்; பள்ளி மாணவி உள்பட 5 பேர் படுகாயம் விவசாயி கைது

திருவாரூர் அருகே நடைபெற்ற கோஷ்டி மோதலில் பள்ளி மாணவி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2018-02-24 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் நமச்சிவாயபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் வேதையன் (வயது50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் (42) என்பவருக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வேதையன் தரப்புக்கும், முருகானந்தம் தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் வேதையன், அவருடைய மனைவி பூபதி (37), மகள் சுவேதா (14), முருகானந்தத்தின் தந்தை அய்யாக்கண்ணு (80), தாய் மங்களம் (65) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதில் சுவேதா, 9-ம் வகுப்பு மாணவி ஆவார். படுகாயம் அடைந்த 5 பேரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது

இதுகுறித்து வேதையன், முருகானந்தத்தின் தாய் மங்களம் ஆகியோர் திருவாரூர் தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனிடையே முருகானந்தத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்