அரசு மானியத்துடன் விவசாய நிலங்களில் மிளகு செடிகள் நடும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரசு மானியத்துடன் விவசாய நிலங்களில் மிளகு செடிகள் நடும் திட்டத்தை ஜவ்வாதுமலை ஒன்றிய கிராமத்தில் கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம்,
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக மிளகு உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தாதன்குப்பம் கிராமத்தில் விவசாயி வெள்ளையன் (வயது 55) என்பவரது விவசாய நிலத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக 40 சதவீத அரசு மானியத்தில் 200 மிளகு செடிகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று தாதன்குப்பத்துக்கு சென்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, தோட்டக்கலை அதிகாரிகளுடன் அங்கு மிளகு செடி நடும்பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தோட்டக்கலைத் துறை மூலமாக மிளகு செடிகள் வளர்ப்பதற்கு 1 எக்டருக்கு 40 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு எக்டரில் குழி வெட்டி, உரம் வைத்து மிளகு செடி நடுவதற்கு ரூ.50 ஆயிரம் செலவு ஆகிறது. இதில் 40 சதவீதம் அதாவது ரூ.20 ஆயிரம் அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த செடிகள் ‘சில்வர் ஓக்’ மரங்களில் கொடிகளாக படரவிடப்படுகிறது. இதன் மூலம் 3 ஆண்டுகள் கழித்து வருடத்திற்கு முதலில் 1 செடி மூலமாக 1 கிலோ மிளகு கிடைக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து 30-வது வருடத்தில் ஒரே செடியில் 80 முதல் 100 கிலோ வரை மிளகு கிடைக்கும். இன்றைக்கு சந்தையில் 1 கிலோ மிளகு ரூ.750 முதல் 900 வரை வாங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் மிளகு செடிகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கிறது” என்றார்.
இதையடுத்து முட்நாட்டூர் கிராமத்தில் ஏஞ்சல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக நடத்தப்பட்டு வரும் சாமை அரவை நிலையத்தினை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாமை அரவை நிலையத்தில் ஏஞ்சல் மகளிர் குழுவை சேர்ந்த 6 பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அரவை நிலையத்தில் ஒரு கிலோ சாமை அரைப்பதற்கு ரூ.5 கூலியாக பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையத்தில் தினமும் 300 முதல் 500 கிலோ வரை சாமை அரைக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை வருமானம் ஈட்டப்படுகிறது. இதனால் தினமும் ஒரு நபருக்கு கூலியாக ரூ.250 முதல் ரூ.400 வரை வருமானம் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பருகூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அசோலா உற்பத்தி செய்யப்பட்டு வருவதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஜமுனாமரத்தூரில் மகளிர் குழுவினர் மூலம் ஆவின் துறை சார்பில் பால்கோவா தயாரிக்கும் நிலையம் செயல்படுகிறது. அங்கும் கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபின் காதி நிறுவனம் மூலமாக செயல்பட்டு வரும் தேன் பதப்படுத்தும் நிலையத்துக்கும் சென்று பார்வையிட்டார். அங்கிருந்த தேன் பதப்படுத்தும் எந்திரம், தேன் கொதிகலன் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த நிலையத்தினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆலஞ்சனூர் கிராமத்தில் பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வரும் இடத்தையும், பெருங்கட்டூர் அரசு மாதிரி பள்ளி மாணவியர் விடுதியையும் பார்வையிட்ட அவர் விடுதியில் உணவு தயாரிக்கும் சமையல் கூடம், மாணவிகள் தங்கும் அறைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
முன்னதாக நம்மியம்பட்டு ஊராட்சி மண்டபாரா கிராமத்தில் மத்திய ரிசர்வ் படையின் முகாமிற்கு கலெக்டர் கந்தசாமி சென்றார். அங்கு வீரர்கள் கையாளும் அனைத்து வகையான துப்பாக்கிகளை பார்வையிட்டார். இந்த முகாமில் தற்போது 461 வீரர்களுக்கு 21 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மொத்தம் 44 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சி முடிந்தபின் இந்த வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர்பொன்னி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜசேகர், உதவித் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.