உப்பிலியபுரம் அருகே மங்கப்பட்டிபுதூரில் இன்று ஜல்லிக்கட்டு

உப்பிலியபுரம் அருகே உள்ள மங்கப்பட்டிபுதூர் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது.

Update: 2018-02-24 22:30 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே உள்ள மங்கப்பட்டிபுதூர் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் முசிறி சப்–கலெக்டர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துறையூர் தாசில்தார் சந்திரகுமார், மண்டல துணை தாசில்தார் மோகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டையொட்டி வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகளை வீரர்கள் அடக்கும் மைதானம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்த ஜல்லிக்கட்டில் சேலம், புதுக்கோட்டை, கோவை, நாமக்கல், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பச்சைமலை பகுதிகளை சேர்ந்த காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்