கொடைரோட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொடைரோடு சுங்கவரி வசூல் செய்யும் மையத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொடைரோடு,
கொடைரோடு சுங்கவரி வசூல் செய்யும் மையத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி போராட்டக்குழு ஒருகிணைப்பாளர் சங்கிலிபாண்டியன் தலைமை தாங்கினார். மள்ளர் கழகம் நிறுவனர் செந்தில்மள்ளர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தமிழ்வேந்தன், கனியமுதன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் புலிகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. கொடைரோடு சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.