பெண் கொலை வழக்கில் 3 மாணவர்கள் கைது

மேலூர் அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்.

Update: 2018-02-24 21:30 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(வயது 55). இவரது அண்ணன் உலகநாதன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அண்ணன்–தங்கை இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்துவந்தது. இந்தநிலையில் பஞ்சவர்ணத்தின் வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது. இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரியில் படிக்கும் 17 வயதுக்கு உட்பட்ட 4 மாணவர்கள் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொரு மாணவரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பஞ்சவர்ணத்தின் மருமகன் ஆவார்.

மேலும் செய்திகள்