வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி,
நல்லம்பள்ளி ஒன்றிய பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜருகு கிராமத்தில் 2017-18 நிதியாண்டில் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணியும் நடக்கிறது.
இந்த திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் நல்லம்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுவரும் பஸ் நிலைய கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 251 ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்ட ரூ.142 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டி பயன்பெற வேண்டும்.
தனிநபர் கழிப்பறை கட்ட விரும்புவோர் அந்தந்த பகுதியின் ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி திட்ட அலுவலர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.