தென்காசி பஸ் நிலையத்தில் பரபரப்பு: பெண்ணை செல்போனில் படம் பிடித்த 2 வக்கீல்கள் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
தென்காசி பஸ் நிலையத்தில் பெண்ணை செல்போனில் படம் பிடித்த 2 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி,
தென்காசி பஸ் நிலையத்தில் பெண்ணை செல்போனில் படம் பிடித்த 2 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
செல்போனில் படம் பிடித்தனர்
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தைச் சேர்ந்தவர்கள் குமார் (வயது 34), மாடசாமி (35). இவர்கள் இருவரும் நேற்று தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த ஒரு பெண்ணை, அவர்கள் இருவரும் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த பெண், அவர்களிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே இருவரும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
2 வக்கீல்கள் கைது
உடனே அங்கு நின்ற பொதுமக்கள் அந்த 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தியபோது குமார், மாடசாமி ஆகிய இருவரும் வக்கீல்கள் என்பது தெரியவந்தது.
பெண்ணை செல்போனில் படம் பிடித்தது தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வக்கீல்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தென்காசி பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.