ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீசுவரர் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீசுவரர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

Update: 2018-02-24 20:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீசுவரர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

மாசி திருவிழா

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்தியபதீசுவரர் கோவிலில் மாசி திருவிழா கடந்த 16–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

9–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. காலையில் சுவாமி– அம்பாள் தேரில் எழுந்தருளினர். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் யானைதந்த பல்லக்கில் சுவாமி– அம்பாள் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 7 மணிக்கு ரி‌ஷப பல்லக்கில் சுவாமி– அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விசுவநாத், தக்கார் அஜீத் மற்றும் பொதுமக்கள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்