காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

Update: 2018-02-23 23:20 GMT

பெங்களூரு,

முதல் கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4 நாட்கள் ஐதராபாத்–கர்நாடக பகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டினார். இந்த நிலையில் 2–வது கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(சனிக்கிழமை) 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வருகிறார்.

பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, தார்வார் ஆகிய மாவட்டங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார். ராகுல் காந்தியின் பயணத்தில் முதல்–மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி அவர் பங்கேற்கும் கூட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்