90 சதவீத ‘கமி‌ஷன்’ குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா?

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–;

Update: 2018-02-23 23:19 GMT

பெங்களூரு,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை 90 சதவீத கமி‌ஷன் அரசு என்று சித்தராமையா குற்றம்சாட்டி இருக்கிறார். அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. அவ்வாறு ஆதாரம் இருந்தால் அதை சித்தராமையா வெளியிட வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.

பிரதமர் பதவிக்கு மோடி வந்த பிறகு ஒரு கரும்புள்ளி கூட இல்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதனால் உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல கவுரவம் கிடைத்து வருகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன என்பதை சித்தராமையா கவனிக்க வேண்டும்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்