ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர போலீஸ் துறை சார்பில், அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமை தாங்கினார். டவுன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகன விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. காரணம் கிருஷ்ணகிரியைச் சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளது. அதனால் கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும் மது குடித்து விட்டு, செல்போன் பேசியபடி, வேகமாகவும், அதிக பாரத்தை ஏற்றியும் வாகனத்தை ஓட்டக்கூடாது.
ஆட்டோக்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். மேலும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது. படித்தவர்களே போக்குவரத்து விதிமுறைகளை அதிக அளவில் கடைபிடிப்பதில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் 52 சதவீதம் இருந்தனர். அப்போது வாகன விபத்து குறைவாக இருந்தது. தற்போது 86 சதவீதம் பேர் படித்துள்ளனர். ஆனால், விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. விபத்துக்களை ஏற்படுத்தும் வண்டி எண்ணை ஆன்லைனில் பதிவு செய்தால், அவர் எத்தனை முறை தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்துவிடும். அதன் மூலம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் ஆட்டோ, கார், செப்டிக் டேங்க் லாரி, டாரஸ் லாரி, டூரிஸ்ட் பஸ், கிரேன் டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.