புதிய நகரம் அமைப்பதற்கான இடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு
புதுக்கோட்டை அருகே புதிய நகரம் அமைப்பதற்கான இடத்தை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை,
கடந்த 14.10.2017-ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு புதிய துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான இடத்தை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், கலெக்டர் கணேஷ் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதித்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அலுவலர்கள் இணைந்து துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு துறை ரீதியான நிலமாற்றப் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், என்றார்.
தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி நரிமேட்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் ரூ.150.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1920 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு பணியினை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முழுவதுமாக பணிகள் முடிவடைந்த ஒரு மாதிரி வீட்டின் பெரிய அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் கே.எம்.சரயு, நில அளவைத்துறை உதவி இயக்குனர் லூர்துசாமி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன் உள்பட வீட்டு வசதித்துறை, குடிசைமாற்று வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.