சமையல் செய்தபோது தீ விபத்து; சிலிண்டர் வெடித்து சிதறியது: கணவன்-மனைவி உயிர் தப்பினர்
சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. அப்போது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஓடிவந்து உயிர் தப்பினார்கள்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி ஓலப்பாளையம் குமலன் தோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. அவருடைய மனைவி லலிதா. இவர்களுடைய ஓட்டு வீட்டின் முன்பகுதியில் தென்னங்கீற்றால் கூறை வேயப்பட்டு அதில் சமையல் அறை இருந்தது. நேற்று காலை 9 மணி அளவில் லலிதா சமையல் செய்துகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் தீப்பிடித்தது. உடனே லலிதாவும் அவருடைய கணவரும் சமையல் அறையில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து வெளியே போட்டுவிட்டு, அவர்களும் ஓடிவந்து உயிர் தப்பினார்கள். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது ‘டமார்‘ என்ற பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதுகுறித்து சின்னசாமி உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள்.
எனினும் சமையல் அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. உள்ளே வைத்திருந்த மளிகை பொருட்கள், துணிகள் கருகி நாசம் அடைந்தன. சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஓடுகள் உடைந்தன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.