அடுத்த மாத இறுதிக்குள் விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்
அடுத்த மாத இறுதிக்குள் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் தமிழக அரசானது ரூ.34 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இங்குள்ள ரெயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வந்த நிலையில் தற்போதுதான் மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மேம்பாலத்திற்கு கீழே அணுகு சாலை அமைக்க மேம்பாலத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக உள்ள பகுதிகளில் 1,216 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் உள்ள 10 வீடுகள் மற்றும் 32 கடைகள் அகற்றப்பட்டது. இதுதவிர பழமைவாய்ந்த செல்வ முத்துமாரியம்மன் கோவிலும் அகற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அணுகு சாலை அமைக்கும் பணிகள் தொடங்குவதாக இருந்த நிலையில் மதில் சுவர் பிரச்சினையால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதனை அகற்றினர். அதன் பிறகு மேம்பால இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இவை முடிந்ததும் அணுகு சாலை அமைக்கும் பணிகளும் தொடங்க உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்ததும் மேம்பாலம் திறப்பதற்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனரின் தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றவுடன் வாகன போக்குவரத்து தொடங்கும். அதற்கான ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை மேம்பால பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு) செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மேம்பால பணிகளை விரைந்து முடிக்குமாறும், இவை முடிந்து உடனடியாக அணுகு சாலை பணியையும் தொடங்கி முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேம்பால பணிகள் முழுவதுமாக முடிந்ததும், அணுகு சாலை அமைக்கப்படும். இந்த பணிகள் ஓரிரு வாரத்தில் முடிக்கப்படும். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழரசி, கோட்ட பொறியாளர் பழனிச்சாமி, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் குரு ஆகியோர் உடனிருந்தனர்.