ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடியில் நடந்த சி.பி.எம். மாநில மாநாட்டின் போது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், முத்துச்சாமி, மாரிமுத்து, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.