வேளாண்துறை அதிகாரிகள் இருக்கை காலியாக இருந்தன
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகளின் இருக்கை காலியாக இருந்ததால், முழுமையான தகவலை பெற முடியவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தலைமை தாங்கினார். பின்னர் விவசாயம் தொடர்பான கோரிக்கைளை விவசாய சங்க பிரநிதிகளிடம் கலெக்டர் கேட்டார். அப்போது அதிகாரிகள் இருக்கையில் வேளாண்மைதுறையை சேர்ந்த அதிகாரிகளின் இருக்கை காலியாக இருந்தது. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அவர்கள் தான் பதில் கூறுவார்கள்.
இந்த நிலையில் இருக்கை காலியாக இருப்பதை பத்திரிகை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தனர். உடனே இதனை கண்ட அதிகாரிகள் காலி இருக்கைகளில் உள்ள பெயர், பலகையை அகற்றினர். பின்னர் பின்புறபகுதியில் அமர்ந்திருந்த அரசு அலுவலர்களை அந்த காலி இடத்தில் அமர வைத்து கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதனால் விவசாயிகளுக்கு முழுமையாக தகவல் கிடைக்காததால் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியடைந்தனர்.
அப்போது ஒரு விவசாய சங்க பிரதிநிதி கூறுகையில், நாங்கள் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பஸ்பிடித்து இங்கே வந்துவிடுகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் வராமல் இருப்பது வேதனையளிக்கிறது. அதே போன்று கூட்டத்தில் பேசுபவர்களும் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விடுத்து இதர பிரச்சினைகளை பேசுகின்றனர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து உண்மையாக விவசாய கோரிக்கைகளை பேச காலதாமதமாகிறது. இனி வரும் கூட்டங்களில் விவசாய துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கரும்பு விவசாய சங்க பிரதி நிதி வாரணவாசி ராஜேந்திரன் பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் திருமானூர் பகுதியிலுள்ள ஏரிகளிலிருக்கும் தண்ணீரை திறந்து விட்டு கருகி கொண்டிருக்கும் நெற்பயிரை காப்பாற்ற வேண்டும். மேலும் சில இடங்களில் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) அய்யாசாமி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) தயாளன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளஆதாரம்)தெய்வீகன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி அழகுகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.