28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.54½ கோடி காப்பீட்டு தொகை
நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.54½ கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ், மைதிலி, வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிசான சாகுபடியில் 58 ஆயிரத்து 697 எக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா பகுதிகளிலும் சேர்த்து 46 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு 19 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களின் மூலம் 1,982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இங்கு சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,660-க்கும் இதர ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,600-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 2016-2017-ம் ஆண்டு நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்த 28 ஆயிரத்து 174 விவசாயிகளுக்கு ரூ.54 கோடியே 40 லட்சம் காப்பீட்டுத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.
சங்கரன்கோவில், திருவேங்கடம், மானூர் தாலுகா பகுதிகளில் சில விவசாயிகளுக்கு குறைவான தொகை வந்து உள்ளதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இதேபோல் மக்காச்சோளம், பாசி பயிருக்கான பயிர்காப்பீட்டு தொகை ரூ.31 கோடி காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்று விவசாயிகளின் வங்கிகணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 65 ஆயிரத்து 748 விவசாயிகள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 902 ஏக்கர் பரப்பிற்கு பயிர்காப்பீடு செய்து உள்ளனர். காப்பீடு தொகை செலுத்த வருகிற 28-ந்தேதி கடைசிநாளாகும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்ய சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் வழங்கப்படுகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் வீணாக திறந்துவிடப்படுகிறது. இதனால் நீர்மட்டம் 61 அடியாக குறைந்துவிட்டது, பல இடங்களில் நெல் பயிர் விளைந்து அறுவடை நடக்கின்ற நேரத்தில் தேவையில்லாமல் 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தண்ணீர் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறினார்கள்.
கலெக்டர்:- சேர்வலாறு அணை முழுமையாக வறண்டுவிட்டது. அங்கு தண்ணீர் இல்லை, பாபநாசம் அணையில் 61 அடி தண்ணீர் உள்ளது. இதனால் வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி ஆகிய 5 கால்வாய் பாசன பகுதியில் நெல் பயிர் விளைந்து அறுவடை நடந்துவருவதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. பாளையங்கால்வாயில் சில இடங்களில் நெல் பயிர் விளைச்சல் அடையாததால் அதில் மட்டும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தங்களுடைய பயிர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறியதால் தற்போது 1,000 கன அடி தண்ணீார் திறந்துவிடப்படுகிறது. குடிநீர் பிரச்சினைக்காக மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி, விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசுகையில், வெள்ளாளங்குளம் கூட்டுறவு வங்கியில், தான் வாங்கிய விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தது. அந்த தொகையை முறைகேடாக எடுத்துவிட்டு, எனது கடன் தள்ளுபடியாகவில்லை என்று கூறி எனது தங்க நகையை தர வங்கி அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதுகுறித்து நான் பலமுறை இங்கே பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடியானவர்களின் முழுமையான பட்டியலும் இல்லை. இந்த விவசாய கடன் தள்ளுபடி குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.