அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மோதல்-அடிதடி
திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்-பழனி சாலையில் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று ஆண்டு விழா நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்பாக மாணவர்களுக்கு கோ-கோ போட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் போது ஒரு தரப்பு மாணவர்களுக்கு சாதகமாக பேராசிரியர்கள் செயல்படுவதாக கூறி மற்றொரு தரப்பு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மற்றொரு தரப்பு மாணவர்கள், பேராசிரியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் அவர்கள் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். ஒரு சில மாணவர்கள் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு எதிர்தரப்பு மாணவர்களை தாக்க முயன்றனர். பின்னர் கல்லூரி டீன் சித்ரா செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களை சமரசம் செய்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், விளையாட்டு போட்டிகளில் கல்லூரி டீன் மற்றும் சில பேராசிரியர்கள் ஒரு துறையை சேர்ந்த மாணவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு துறையை சேர்ந்த மாணவர்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். பெரும்பாலான போட்டிகளில் எந்திரவியல் துறை மாணவர்கள் வெற்றிபெற்றதாக அறிவித்தனர். இன்று (நேற்று) நடந்த கோ-கோ போட்டியிலும் எந்திரவியல் துறை மாணவர்களுக்கு சாதகமாக செயல்பட்டனர், என்றனர்.
முன்னதாக, ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஞ்ஞானி டில்லிபாபு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதையடுத்து ஒரு தரப்பு மாணவர்களை கல்லூரி வகுப்பறைக்குள் வைத்து பேராசிரியர்கள் பூட்டினர்.
அந்த பகுதியில் மோதல் உருவாகும் சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே மற்றொரு தரப்பு மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகராறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கலைந்து செல்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர். பின்னர் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக டீன் உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கல்லூரி டீன் சித்ரா செல்வியிடம் கேட்டபோது, விளையாட்டு விழா முடிவுகளால் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் போட்டியின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தவாரம் கல்லூரி நிர்வாக குழுவை கூட்டி, தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஆண்டுவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என்றார்.