‘நீட்’தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
அனைத்து கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் திருப்பூரில் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகளில் உள்ள மாணவர் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் சங்கீதா கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குகன், திராவிடர் கழக மாவட்ட மாணவரணி தலைவர் திலீபன், ம.தி.மு.க. மாநகர் மாணவரணி அமைப்பாளர் சிவக்குமார், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு வடக்கு மாவட்ட துணை தலைவர் முகமது முபிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் வகையில் ‘நீட்’ தேர்வை திணிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘நீட்’ தேர்வு குறித்த ஆபத்தை விளக்கும் வகையில் கல்லூரி, பள்ளிகள் முன்பு தொடர் கூட்டங்கள் நடத்துவது, விடுதிகள் தோறும் சென்று மாணவர்களை சந்திப்பது, மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என்றும், நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் தமிழ்மொழி உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் இருக்கைகளை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முடிவில், திராவிடர் கழகத்தின் தாராபுரம் மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் இளந்தென்றல் நன்றி கூறினார்.