பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்
விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பாகூர்,
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை மற்றும் பிரதம மந்திரியின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி மையம் தொடக்க விழா நடந்தது. பாகூர் கன்னியக்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் துணை ஆணையர் வல்லவன் தலைமை தாங்கினார். தனவேலு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பயிற்சி மையத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி மையத்தில் 350 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு புதிய திட்டம் கொண்டு வர உள்ளது. மாதந்தோறும் இலவச அரிசி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதி நெருக்கடியால் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் திண்டாடி வருகிறோம்.
இலவச அரிசி திட்டத்திற்கு உள்ளூர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பழையபடி செயல் பட அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு கட்ட போராட்டங்களில் பாப்ஸ்கோ ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்துறை ரூ.33 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிதி நெருக்கடியினால் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் 90 சதவீதம் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பாப்ஸ்கோ மூலமாக பல புதிய திட்டங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் வருவாயை பெருக்க முடியும். விரைவில் ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். பின்னர் நிலுவையில் உள்ள சம்பளம் படிப்படியாக வழங்கப்படும். எனவே ஊழியர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.