சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் மாநகராட்சி என்ஜீனியர் கைது

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மாநகராட்சி என்ஜீனியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-22 22:13 GMT

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாபுலால் கச்சுரு. இவர் தனது பதவிகாலத்தில் இரண்டு முறை லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.

இந்தநிலையில் அவரின் வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் தனது பதவி காலத்தில் ரூ.18 கோடியே 24 லட்சத்து 901 மதிப்புள்ள சொத்துகளை குவித்து இருந்தது தெரியவந்தது.

எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கில் போலீசார் பாபுலால் கச்சுருவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்