மின்சார ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த 6 பேர் கைது

மின்சார ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-22 21:59 GMT

மும்பை,

மும்பையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ரெயில் வாசல்படியில் நிற்கும் பயணிகளிடம் செல்போன் பறிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 22 ரெயில்வே போலீசார் போதை ஆசாமிகள், லாரி டிரைவர்கள் போல வேடமணிந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், கடந்த 4 நாட்களில் ரெயில்வே போலீசார் 6 செல்போன் பறிப்பு திருடர்களை மடக்கி பிடித்து கைது செய்து உள்ளனர். செல்போன் திருடர்களை ஒட்டுமொத்தமாக பிடிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்