வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்தார்
சிவகங்கையில் வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை திருப்பத்தூர் ரோட்டில் மாவட்ட கோர்ட்டு உள்ளது. திருப்பத்தூர் ரோட்டில் இருந்து கோர்ட்டு வளாகத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் இந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி, நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் இருந்து வக்கீல்கள் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் தங்கப்பாண்டியன், பொருளாளர் வசந்தகுமார், இணைச் செயலாளர் இளையராஜா தலைமையில் வக்கீல்கள் சிவகங்கை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
முன்னதாக வக்கீல்கள் போராட்டம் நடத்தியபோது அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று மறியல் செய்தவர்களை கடந்து புறப்பட்டு சென்றது. அப்போது அந்த பஸ்சை நிறுத்தும்படி வக்கீல்கள் கூறினர். ஆனால் இதை ஓட்டி வந்த டிரைவர் செல்வராஜ் (வயது 54) நிறுத்தவில்லை. இதனால் பஸ்சை தடுக்க முயன்று அதன்பின்னால் சென்ற வக்கீல் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் தடுமாறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பஸ்சை வக்கீல்கள் நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் பஸ் டிரைவர் செல்வராஜ் தாக்கப்பட்டார். அங்கு விரைந்து வந்த போலீசார் பஸ் டிரைவரை மீட்டனர்.
பின்னர் வக்கீல் சங்க செயலாளர் தங்கப்பாண்டியனும், அரசு பஸ் டிரைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
தாக்கப்பட்ட டிரைவர் செல்வராஜின் சொந்த ஊர், பரமக்குடியை அடுத்த சோமநாதபுரம்.
பரமக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பஸ்சில் டிரைவராக பணியாற்றிய அவர், தாக்கப்பட்ட நிலையில் பணி முடிந்து வீடு திரும்பினார். அவர் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானது. இதை கண்டு வீட்டில் இருந்தவர்கள், உறவினர்கள் விசாரித்தனர்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த செல்வராஜ் திடீரென விஷம் குடித்து வீட்டின் அருகே நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எமனேசுவரம் போலீசார் விசாரணை நடத்தியபோது, விஷம் குடிக்குமுன் செல்வராஜ் கடிதம் எழுதி வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.