செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் 50 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திரவுபதியம்மன் கோவில்தெரு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிகள் தொடங்கின. இதுபற்றி தகவல் அறிந்த திரவுபதியம்மன் கோவில் தெரு, உப்பக்களத்தெரு, பண்டிதர் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகே நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.