நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்க மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை படுகுழியில் தள்ளும் ‘நீட்‘ என்ற நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட அனைத்து இயக்க மாணவர்கள் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-22 22:45 GMT
மலைக்கோட்டை,

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை படுகுழியில் தள்ளும் ‘நீட்‘ என்ற நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட அனைத்து இயக்க மாணவர்கள் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் அஜிதன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்பு மாநில செயலாளர் மதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தலைமை பேச்சாளர் பெரியார் செல்வன் கண்டன உரையாற்றினார். இதில் இந்திய இஸ்லாமிய அமைப்பு மாவட்ட செயலாளர் ரியாசுதீன், காங்கிரஸ் மாணவரணி மாவட்ட தலைவர் அருள், ம.தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த்பாபு, அனைந்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தினேஷ், பிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் நசுருதீன், தி.க. மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடர் கழக நிர்வாகி கனகவல்லி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்